கச்சேரி ஆரம்பம்

கச்சேரி ஆரம்பம்

நேரம் : இரவு 10 மணியிலிருந்து 2 வரை குறுஞ்செய்தி அனுப்ப : Anand & Sivaranjaniy பணியில் : ஆனந்த் & சிவரஞ்ஜினி

கச்சேரி ஆரம்பம், இர‌வு முழுதும் பேரின்பம்!
இனி இரவுகள் மாறும்; வித்தியாசமான ஒலி-மயமான ஒன்றாக இருக்கும்!

நாள் முழுவ‌தும் வேலை செய்துவிட்டு, இர‌வு நேர‌த்தில் ஒய்வு எடுத்துக்கொண்டு, நல்ல‌ பாட‌ல்க‌ளைக் கேட்க ஆசையா? தூங்க‌ நினைத்தாலும், தூக்க‌ம் வ‌ராம‌ல் என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ல் இருந்தீர்களா?? விழித்திருந்து வேலை செய்து கொண்டு, ப‌‌ல‌ புதிய‌ விஷ‌ய‌ங்க‌ளைத் தெரிந்துக்கொள்ள‌ விருப்ப‌மா?

திங்க‌ள் முத‌ல் வெள்ளி வ‌ரை, இர‌வு 10 ம‌ணி முத‌ல், பின்னிர‌வு 2 ம‌ணி வரை, க‌ச்சேரி ஆர‌ம்ப‌ம் நிக‌ழ்ச்சியை கேளுங்க‌ள்!

'அந்த‌ நாள் ஞாப‌க‌ம்' அங்க‌த்தில் தின‌மும், இதே தேதியில் அன்று என்ன‌ நட‌ந்தது என்று தெரிந்துக்கொள்ளுங்க‌ள்‌! 'அப்ப‌டியா' அங்க‌த்தின் வழி‌, புத்த‌ம் புதிய‌ த‌க‌வ‌ல்க‌ளைப் பெற்றுக்கொள்ளுங்க‌ள்!

உங்க‌ளை பாதிக்க‌க் கூடிய‌ நோய்க‌ள் ம‌ற்றும் ம‌ருத்துவ‌ரின் ஆலோசனை, சிங்க‌ப்பூரில் கிடைக்க‌க் கூடிய‌ சிறந்த‌ உண‌வு வ‌கைக‌ள், ஆங்கில‌/த‌மிழ் திரைப்ப‌ட‌ங்க‌ளின் க‌ண்ணோட்ட‌ம், த‌லைப்பு தொட்டு உரையாட‌ல் என்று ப‌ல‌ அங்க‌ங்க‌ள் உங்க‌ளுக்காக‌வே காத்திருக்கின்ற‌ன‌!

உங்க‌ள் குடும்ப‌ உறுப்பின‌ர்/உற‌வின‌ர்/நண்ப‌ர் நாளை அவ‌ரின் பிறந்த‌நாளைக் கொண்டாடுகிறாரா? அவ‌ரின் பெய‌ர், தொலைபேசி எண், பிற‌ந்த‌ தேதி, உங்க‌ள் பெய‌ர், தொலைபேசி எண் ஆகிய‌ விவ‌ர‌ங்க‌ளை, எங்க‌ளுக்கு அனுப்பி வையுங்க‌ள்! நள்ளிர‌வு 12 ம‌ணிக்கு ந‌டைபெறும் 'பிற‌ந்த‌ தேதி இன்னைக்கு தான்!' அங்க‌த்தில், வானொலியில் அவ‌ருக்கு அழைத்து பிற‌ந்த நாள் வாழ்த்துக்க‌ளைக் கூறுவோம்!

நிக‌ழ்ச்சிக‌ளைப் ப‌ற்றிய‌ உங்க‌ள் க‌ருத்துக‌ளைக் கூற‌, இந்த‌ மின்‌ அஞ்ச‌ல் முக‌வ‌ரிக‌ளுக்கு அனுப்பி வையுங்க‌ள்! ananthan@mediacorp.com.sg அல்லது sivaranjaniy@mediacorp.com.sg

ம‌ற‌க்காம‌ல் கேளுங்க‌ள், திங்க‌ள் முத‌ல் வெள்ளி வ‌ரை, இர‌வு 10 ம‌ணி முத‌ல், பின்னிர‌வு 2 ம‌ணி வரை, க‌ச்சேரி ஆர‌ம்ப‌ம்! இர‌வு முழுதும் பேரின்பம்!