Anand
1. உங்கள் செல்ல பெயர்
SNIPER. தேசிய சேவை செய்யும் போது எனக்கு இந்தப் பெயர் கிடைத்தது.
2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
i) வெளிப்படை - மனசுல பட்டதைச் சொல்வேன்! முன்னுக்கு வைத்து பின்னாடி பேசப்பிடிக்காது!
ii) சண்டைக்கோழி! - ஹஹ! சும்மா! ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தகுந்த காரணம் இருக்கனும்!
iii) சாப்பாட்டுராமன் - பல நாடுகளில் உணவு இல்லாமல் கஷ்டப்படுராங்க! அதனால சாப்பாட்டை நாம வீணாக்கக் கூடாது யா!
3. பிடித்தமான பொழுது போக்கு
தூங்குவது!!! இல்லை சும்மா..எனக்கு என் நண்பர்களுடன் காற்பந்து விளையாடப் பிடிக்கும். நண்பர்களுடன் காற்பந்தாட்டங்களையும் பார்க்கப் பிடிக்கும்
4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
என்னது இது???
5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
விமானியாகியிருப்பேன்...உலகத்தைச் சுற்ற எனக்கு ஆசை!
6. படைப்பாளராகமறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
ஒலியின் சிறந்த 100 பாடல்கள் Countdown 2010நிகழ்ச்சியில், ஒலி நேயர்களுடன் ஆடிக்கொண்டிருந்த வேளையில், திடிரென்று சிலர் என்னை அவர்களது தோள்பட்டையில் தூக்கி வைத்து ஆட ஆரம்பித்தனர். ஒரே கூட்டமாக இருந்தது! ஆனந்த வெள்ளத்தில் எல்லோரும் இருந்தனர். பாதுகாவலர்கள் விரைந்து வந்தனர்! மறக்க முடியாத நகைச்சுவை அனுபவபாக அது அமைந்தது!
7. பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
இசையமைப்பாளர் - AR ரஹ்மான் பாடல் - அமரன் படத்திலிருந்து வெத்தலைப் போட்ட
8. கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகியோடு நடிப்பீர்கள்?
அசின். ஒரு நப்பாசைதான்! என் ஆசையை யாராவது நிறைவேற்றுவீங்களா?
9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
என்னை முழுங்குற மாதிரி பேசுற!! மெதுவா பேசு!
10. நேயர்களுக்குஉங்க பாணியில் ஒரு punch dialogue..
சுட்ட வரி தான்!! 'நல்லவனுக்கு நான் நல்லவன். கெட்டவனுக்கு நான் பொல்லாதவன்!' Dot!













