Bamah Balakrishnan
Bamah Balakrishnan

1. உங்கள் செல்ல பெயர் பேமி

2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
துடுக்குக்காரி, சண்டைக்காரி, தொட்டாச்சிணுங்கி..இன்னும் ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்க. வம்புக்காரி! 

3. பிடித்தமான பொழுது போக்கு
கடலைப் போடுவது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே வறுத்த கடலை சாப்பிடுவது

4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
அம்மா!! அம்மா என்பது தமிழ் வார்த்தை. அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை

5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
இந்நேரம் பாட்டியாக இருப்பேன்.

6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
செய்தி வாசிக்கும் போது என்னையும் அறியாமல் ஏழு என்ற எண்ணை மூன்று முறை "ஏடு", என்று வாசித்து மூன்று முறையும் மன்னிப்பு கேட்டது. (ஏடு என்றால் தெலுங்கில் ஏழு என்று அர்த்தம்)

7 பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
இளையராஜா.. மற்றும் எம் எஸ் விஷ்வநாதனின் இசையில் நினைத்தாலே இனிக்கும் படத்தில் ஒலித்த "பாரதி கண்ணம்மா" பாடல்

8. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகனோடு நடிப்பீர்கள்?
விக்ரம். விக்ரம்ன்னா எனக்கு chaala இஷ்டம்

9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
போதும்! நிறுத்து! நாளைக்குப் பாத்துக்கலாம்.

10. நேயர்களுக்கு உங்க பாணியில்  ஒரு punch dialogue..
மனக்கஷ்டமா? அப்படியே பின்னாடி தூக்கிப் போட்டுட்டுப் போய்க்கிட்டே இருங்க!