Mohd Rafi
Mohd Rafi

1. உங்கள் செல்ல பெயர்
அப்படி ஒன்று இதுவரை இருந்ததில்லை! இனிமேல் கிடைத்தாலும் கிடைக்கலாம்! வீட்டுல் செல்ல பிராணி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு சமயம் எனக்கு ஒன்று கிடைத்திருக்கும்!

2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று எல்லாம் சொல்ல ஆசைதான் ஆனால் என் மனசாட்சி உண்மையை மட்டுமே பேசச் சொல்கிறது!
வீடு வேலை மற்றும் வீட்டு வேலை!!

3. பிடித்தமான பொழுது போக்கு
அன்றும் இன்றும் என்றும் தொலைபேசியில் தொங்குவது!

4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
விஜயகாந்துக்குப் பிடிக்காத வார்த்தை, ஆனால் எனக்கு பிடித்தது மன்னிப்பு!

5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
குப்பைப் போடுபவருக்கு எதிராக ஓர் இயக்கத்தைத் தொடங்கி அதற்குத் தலைவனாக ஆகியிருப்பேன்!

6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
ஒலி படைப்பாளர் ஆனதையே என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை!

7. பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல் பிடித்த இசையமைப்பாளர் -
இளையராஜாவுக்கு இசை சொல்லிக் கொடுத்த ஜி.கே.வெங்கடேஷ்!
பிடித்த பாடல் - ஒரு பாடலை பல ராகத்தில் எப்போது கேட்டாலும் பிடிக்கும்!

8. கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகியோடு நடிப்பீர்கள்?
மக்கள் குரலைக் கேட்டு ரசிக்கிறாங்க என்கிறதுக்காக எல்லா கொடுமைகளையும் சகிப்பாங்கன்னு நினைக்கக்கூடாது! அவங்க பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு! அப்படி தப்பித் தவறி ஒரு வாய்ப்பு கிடைச்சா நடிகை கண்ணாம்பா கூட தான் நடிப்பேன்னு அடம்பிடிப்பேன்! அநேகமா மேலோகத்துல அதுக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்!

9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
வாயை மூடுடான்னு! சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை!

10. நேயர்களுக்கு உங்க பாணியில்  ஒரு punch dialogue..
என் குருநாதர் டி ஆர் வாழ்க!
தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி
கீழ பார்த்தா கரப்பான்பூச்சி
எடுத்து பார்த்தேன் செத்து போச்சு
கீழ விட்டேன் ஓடி போச்சு!
How is it? ரொம்ப கேவலமா இருக்கா!!!