P N Bala Supramaniam
P N Bala Supramaniam

1. உங்கள் செல்ல பெயர்
'பாலசுப்பிரமணியம்' உள்ளே அடங்கியிருக்கிறது.

2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
பலவற்றைப் புரிந்துக்கொள்ள விரும்புபவன்

3. பிடித்தமான பொழுது போக்கு
தனிமையில் சிந்திப்பது

4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
என் மனைவி உச்சரிக்கும் தித்திப்பான - 'அத்தான்'

5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
வேறொரு ஊடகத்துறைதான்

6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
'ஏய்ட்ஸ்' பற்றிய ஒரு நேரடி அறிவிப்பில் 'கண்டவர்களுடன் உடல் உறவு கொள்ளக்கூடாது' என்பதை 'கணவருடன்' என்று வாசித்ததுதான்.

7.  பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
பிடித்த இசையமைப்பாளர் - MS விஸ்வநாதன் (ராமமூர்த்தி)
பிடித்தப் பாடல் - பொன்னை விரும்பும் பூமியிலே

8. கதாநாயகனாக அல்லது கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகன் அல்லது கதாநாயகியோடு நடிப்பீர்கள்?
நான் கதாநாயகன் என்றால், என் 'காதலி'தான் கதாநாயகி

9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால். உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
ஒலிக்கலைஞனே, ஒரு முத்தம் கொடு

10. நேயர்களுக்கு உங்க பாணியில் ஒரு punch dialogue..
இசைக்கு இசையாத இதயமே இல்லை; இசைக்கு இசையவில்லை என்றால், அது இதயமே இல்லை.