
1. உங்கள் செல்ல பெயர்
அப்பா செல்லமாக கூப்பிடுவது: கட்டச்சி
2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில்
கனிவு, வாயாடி, தூங்குமூஜ்சி
3. பிடித்தமான பொழுது போக்கு
காற்பந்து விளையாடுவது, பார்ப்பது
4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
அப்பா; ரொம்ப பிடித்தமானவரும் அவர்தான்
5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால் படித்த படிப்பிற்கு ஏற்ப சிங்கப்பூரின் கொள்கைகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பேன்!
6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
பல அனுபவங்கள் இருக்கு! முதற் முதலில் சோமு அவர்களுடன் நிகழ்ச்சிப் படைத்தபோது அவர் சொன்ன தகவலைக் கேட்டு வியந்துப்போய் ஒலிவாங்கியை அடைக்காமல் அப்படியா நீங்கள் சொன்னது உண்மையா என்று கேட்டுவிட்டேன்!
7. பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
இளையராஜா, அந்தி மழை பொழிகிறது
8. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகயோடு நடிப்பீர்கள்?
dhanush: ஆடுக்களம் மற்றும் மயக்கம் என்ன பார்த்து மயங்கிபோனவள் தான்
9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
பாடுவதை நிறுத்திவிட்டு நிகழ்ச்சியை ஒழுங்காகப் படை!
10.நேயர்களுக்கு உங்க பாணியில் ஒரு punch dialogue..
கண்ணா வாழ்க்கை ஒரு வட்டம். இங்கே ஜெக்கிறவன் தொப்பான் தொக்குறவன் ஜெப்பான்! அதனால overra scene பொடக்கூடாது!














