VimalaDj Vimala
 

1. உங்கள் செல்ல பெயர் - மிலா

2. உங்களைப் பற்றி 3 வார்த்தைகளில் வம்பு + சிரிப்பு = கலகலப்பு

3. பிடித்தமான பொழுது போக்கு
இசைக் கேட்பது, திரைப்படம் பார்ப்பது, இணையத்தில் உலா வருவது

4. தமிழில் ரொம்ப பிடித்த வார்த்தை?
காதல்

5. ஒலி படைப்பாளர் ஆகவில்லை என்றால்...
ஒலியில் வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டே இருப்பேன்..

6. படைப்பாளராக மறக்க முடியாத நகைச்சுவையான அனுபவம்?
தீபாவளியை வரவேற்கும் அதிகாலை நிகழ்ச்சியை ரஃபியும் நானும் படைத்துக் கொண்டிருந்த போது, நேரடி வாழ்த்து நேர நிகழ்ச்சியில் அழைத்த நேயர் ஒருவர், என்னிடம் ஒன்று கூற வேண்டுமென்றார். அவர் பேசிய தொணியின் ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்த நான்.. இல்லை.. பரவாயில்ல.. அப்பறம் பேசலாம் எனத் தவிர்க்கப் பார்த்தேன். ஆனால் குறும்பான ரஃபி விடாமல் சொல்லுங்க.. சொல்லுங்க என உசுப்பேற்றிவிட.. அந்த நேயர்.. 
I Love You Vimala என்றார். அதிர்ந்துப் போன நான்.. Thank You நன்றி எனக் கூறி முடித்தேன்.  அந்த சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் அவமானமாகவும் அதே நேரத்தில் சிரிப்பாகவும் இருக்கும். 

7.  பிடித்த இசையமைப்பாளர் மற்றும் பாடல்
பிடித்த இசையமைப்பாளர் - இளையராஜா
பிடித்தப் பாடல் - நீ ஒரு காதல் சங்கீதம்

8. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த கதாநாயகயோடு நடிப்பீர்கள்?
பிரித்திவிராஜ்..

9. ஒலி கூடத்தில் இருக்கும் ஒலிவாங்கியால் பேச முடிந்தால்.. உங்களைப் பற்றி என்ன சொல்லும்?
வானொலியில தானே பேசுறே! அப்புறம் எதுக்கு இவ்வளவு அபிநயம்? 10.நேயர்களுக்கு உங்க பாணியில்  ஒரு punch dialogue..  புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்.. அந்த புதிர் இருக்கும் வரை தான் வாழ்க்கை ருசியாய் இருக்கும்...